தமிழ்நாடு

3 ஆண்டுகளுக்குப் பின் மணல் அள்ளத் தடை: மக்களை ஏமாற்றும் செயல்

DIN

மணல் அள்ள மூன்று ஆண்டுகளுக்குப் பின் முற்றிலும் தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்படும். அதுவரை குவாரிகளில் இருந்து மணல் சப்ளை செய்யும் பணியை அரசே மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில்தான் மணல் கொள்ளை மிக அதிக அளவில் நடந்துள்ளன. தமிழகத்தில் மணல் இருக்கிற பெருவாரியான இடங்களில் முடிந்தவரை மணல் அள்ளி, தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்ட பிறகு நல்லவர்கள் போல பேசுவது ஒட்டு மொத்த மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. இதை தேமுதிக கண்டிக்கிறது. எனவே, மணல் அள்ளுவதை உடனடியாகத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT