தமிழ்நாடு

கீழ் நீதிமன்றங்களில் தமிழில்  தீர்ப்பு வழங்க 'தடா': உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

DIN

புதுதில்லி: கீழ் நீதிமன்றங்களில் தமிழில்  தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு  தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1994-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமானது வெளியிட்ட அறிவிக்கை ஒன்றில் தமிழகம் முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினை எதிர்த்து 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்பொழுது வழங்கப்பட்ட தீர்ப்பில் முதலில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தீர்ப்பு இருக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது.  பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வானது மேல்முறையீட்டில் தமிழ் அல்லது ஆங்கிலம் என்பதற்கு பதிலாக தமிழில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது கீழ் நீதிமன்றங்களில் தமிழில்  தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்து  தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கானது பின்னர் விரிவாக விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT