வெப்பச்சலனம்: சென்னையில் பரவலாக காற்றுடன் மழை
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, ராயப்பேட்டை, சாந்தோம், எம்.ஆர்.சி.நகர்,
தமிழ்நாடுவெப்பச்சலனம்: சென்னையில் பரவலாக காற்றுடன் மழை
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, ராயப்பேட்டை, சாந்தோம், எம்.ஆர்.சி.நகர்,
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, ராயப்பேட்டை, சாந்தோம், எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
இமயமலைத் தொடர்களில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் வட மாநிலங்களில் விரைவில் மழையை வரவழைக்கும் சூழல் நிலவுகிறது. தென் இந்தியாவைப் பொருத்தவரை வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதிகளில் மழை மேகங்கள் சூழ்ந்து வருகின்றன.
இதன்படி மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தமிழகம், கேரளப் பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று இன்சாட் 3டி செயற்கைக்கோள் மேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புகைப்படம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.