தமிழ்நாடு

மக்களின் எதிர்ப்பு காரணமாக 41 டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசு தகவல் 

DIN

சென்னை: பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக்ததில் 41 பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு தரப்பில் திருமுல்லைவாயல் உட்பட 41 இடங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும், விதிகளுக்கு உட்பட்டே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், விதிகளுடன் மக்களின் உணர்வுகளை அறிந்து புதிய கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT