தமிழ்நாடு

கோடம்பாக்கத்தில் ரூ.45 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள்: வருமானவரிப் புலனாய்வுத்துறைக்கு மாற்றம்

கோடம்பாக்கத்தில் காவலர் சீருடை விற்பனைக் கடையின் உரிமையாளர் வீட்டில் ரூ.45 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து வருமானவரிப் புலனாய்வுத்துறைக்கு விசாரணை நடத்தி வ

DIN


சென்னை: கோடம்பாக்கத்தில் காவலர் சீருடை விற்பனைக் கடையின் உரிமையாளர் வீட்டில் ரூ.45 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து வருமானவரிப் புலனாய்வுத்துறைக்கு விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனி 2வது தெருவில் வசித்து வரும் தண்டபானி, காவல்துறையினருக்கு சீருடை தைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இன்று காலை அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, ரூ.45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து முதலில் கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தை வருமானவரிப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் தரகராக, தண்டபாணி செயல்பட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து வருமானவரிப் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT