தமிழ்நாடு

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் இரும்பு எண்ணெய் பேரல் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

தினமணி

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் கேஸ் வெல்டிங் செய்யுமிடத்தில் இரும்பு எண்ணெய் பேரல் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 

அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் பழைய இருப்பு கிடங்கு நடத்துபவர்  சர்தார்பஷா. இவர் பல்வேறு பகுதிகளில் இருந்து இரும்பு , தகடு  சம்பந்தமான அனைத்து பொருள்களையும் வாங்கி கிடங்கில் வைத்து அதனை தகடுகளாக மாற்றி விற்பனை செய்துவந்துள்ளர். 

காமராஜர் நகர் சாரம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்ற வேலாயுதம் (43) இன்று எண்ணெய் பேரல்களை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி செய்து தகடுகளாக மாற்றி வந்துள்ளார். அப்போது ஒரு எண்ணெய் பேரல் திடீரென வெடித்து அவரது வயிற்றை கிழித்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, சம்பத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் இரும்பு  கழிவுகளை கொண்டுவந்து, பாதுகாப்பற்ற வகையில்  கேஸ் மூலம் பிரித்தெடுத்து விற்பனை செய்தவந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT