தமிழ்நாடு

மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?: தமிழிசை கண்டனம்

DIN

சென்னை: மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது காவல்துறையினர் நேரடி தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழகம் முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை அடக்கி, ஒடுக்க காவல் துறையினர் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தடியால் தாக்குவது கண்டிக்கத்தக்கது.

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசு, மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்?.

மக்கள் விரும்பாத இடங்களில் உள்ள மதுக்கடைகளை அரசு உடனே மூட வேண்டும். மதுவுக்கு எதிராக தமிழக பெண்களின் போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்ல பெண்களை திரட்டி வரும் ஜூன் 16-ஆம் தேதி எனது தலைமையில் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளை மூடச்சொல்லி, போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT