பணிநீக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுப்பணித்துறையி்ல் பணி நீக்கம் செய்யப்பட்ட தினக்கூலி ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி தரக்கோரி சுதேசி பஞ்சாலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: பொதுப்பணித்துறையி்ல் பணி நீக்கம் செய்யப்பட்ட தினக்கூலி ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி தரக்கோரி சுதேசி பஞ்சாலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித் துறையில், தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட 2648-க்கும் மேற்பட்டோர், முறைகேடாக நியமிக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன.
இதையடுத்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு தினக்கூலி ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. தேர்தல் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே சட்டப்பேரவை முற்றுகை, சாலை மறியல், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முற்றுகை, தர்னா, ஆர்ப்பாட்டம் உள்ளி்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக சுதேசி பஞ்சாலை அருகே ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் அன்பரசன், லெனின், பாஸ்கர், இளவரசன், காரைக்கால் வினோத், மணிவண்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.