தமிழ்நாடு

செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் முருகன் மீண்டும் ஆஜர்

தினமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த மார்ச் மாதம் போலீஸார் நடத்திய சோதனையின் போது இரண்டு செல்லிடப்பேசிகள், சிம்கார்டு, சார்ஜர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், முருகன் மீது பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மற்றவர்களைச் சந்தித்துப் பேச முருகனுக்கு சிறை நிர்வாகம் 3 மாதங்களுக்குத் தடை விதித்தது.

மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முருகன் வேலூர் நீதிமன்றத்தில் 4வது முறையாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT