தமிழ்நாடு

இளைஞர் சக்தியிடம் இந்தியாவின் எதிர்காலம்! குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேச்சு

DIN

இந்தியாவின் எதிர்காலத்தை இளைஞர் சக்தியே நிர்ணயிக்கும் என்று, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
உதகையிலுள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கும் மாணவர்களிடையே உரையாடக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மகிழ்ச்சியானதாகும். எந்த ஒரு நாடும் இளைஞர்களால்தான் மாற்றமும், முன்னேற்றமும் அடையும். உலக நாடுகள் இந்தியாவை உயர்வாக மதிக்கும் வகையில் இளைய சமுதாயத்தினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
தாவரங்கள் வேரூன்றி வாழ்வதுடன், விதைகளையும் பரப்புகின்றன. இந்த ஒப்புமை நமது நாட்டின் கலாசாரத்துக்கும் பொருந்தும். உறுதியான அடித்தளத்தின் மீது கல்வி பயிலும் பள்ளிக் குழந்தைகள் சமுதாயத்தை வளர்ச்சியை சிகரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மாணவர்கள் பொருள் சார்ந்த வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சமூக சேவைகளிலும் ஈடுபட வேண்டும் என்றார்.
கோவையில் வரவேற்பு: தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் 12.50 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக அவர் உதகை சென்றார். தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் அவரை வரவேற்றார்.
உதகையில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மீண்டும் மாலை சுமார் 5 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், 5.15 மணி அளவில் புது தில்லிக்குப் புறப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT