முகப்பு
தமிழ்நாடு

தனியார் நிறுவன பாலில் ரசாயனம்: என்ன சொல்கிறார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

தமிழகத்தில் விற்பனையாகும் தனியார் நிறுவன பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:


சென்னை: தமிழகத்தில் விற்பனையாகும் தனியார் நிறுவன பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் மட்டுமே உடல்நலத்துக்கு நல்லது. தாய்ப்பாலுக்கு நிகரானது. மற்ற தனியார் நிறுவனப் பால்கள் அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

பால் கெடாமல் இருக்க தனியார் நிறுவனங்கள் ரசாயனத்தை கலக்குகின்றன. தனியார் பால் மூலம் புற்றுநோய் வருகிறது. தனியார் நிறுவன பாலில் ரசாயனம் கலப்பதால் தான் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூறினார்.

இது குறித்து செய்தி ஊடகம் ஒன்று அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு,  பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்தால் 5 மணி நேரத்தில் பால் கெட வேண்டும். அவ்வாறு கெடவில்லை என்றால் அது ரசாயனம் கலந்த பால் தான் என்று கூறினார்.

பால் வளத் துறை அமைச்சராக இருக்கும் நீங்கள், இவ்வாறு கூறுவது பொறுப்பற்றதாக இருக்காதா? தனியார் நிறுவனங்களின் பாலை குடிப்பதாக இருந்தால் பொதுமக்கள் யோசித்துக் குடிக்க வேண்டும் என்று சொல்வது பொறுப்பற்ற பேச்சு அல்லவா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், தனியார் நிறுவனப் பால் நிறுவனங்கள் ரசாயனங்கள் கலப்பது குறித்து ஆதாரத்தை திரட்டி வருகிறோம். ஆதாரம் கிடைத்தவுடன் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆவின் பால் விற்பனை மற்றும் பால் கொள்முதல் ஆகியவை உயர்ந்திருக்கிறது என்றும், தனியார் பாலை வாங்காமல் பொது மக்கள் ஆவின் பாலை வாங்க வேண்டும் என்றால், தற்பொழுது பால் பவுடர் செய்யும் பணியை நிறுத்திவிட்டு, அனைத்தையும் பால் பாக்கெட்டுகளாக விற்க முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →