தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.
புது தில்லி: புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் அதற்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடியுடன், முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமர் மோடியுடன் பழனிசாமி பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பிரதமரை, ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது.