முகப்பு
தமிழ்நாடு

வடலூர் அருகே முதியவர் மர்ம முறையில் அடித்துக் கொலை

வடலூரில் முதியவர் மர்ம முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

நெய்வேலி: வடலூரில் முதியவர் மர்ம முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடலூர் எம்.கே.கே பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (66). இவர், வடலூர் பேரூராட்சியில் துப்பரவு பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் அருகே தலையில் இரத்த காயங்களுடன்  இன்று காலை இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி குறிஞ்சிபாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதல்கட்ட விசாணையில் ராஜாங்கம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் கடந்த 10 தினங்களுக்கு முன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால், தலைமறைவாக இருந்து வந்தவர் இன்று காலை வீட்டின் அருகே தலையில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், அப்பகுதியில் வடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →