தமிழ்நாடு

52 நாள் சிறைவாசத்திற்கு பின் வைகோ ஜாமீனில் விடுதலை

தினமணி

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ மீது தேசத் விரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் சென்னை பெருநகர 14 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு கடந்த மாதம் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கு வைகோ மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வைகோ, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

இவ்வழக்கில், 51 நாள்கள் நீதிமன்றக் காவலை சிறையில் கழித்த பின்னர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வைகோ திடீரென செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், எந்தவித நிபந்தனை விதிக்காமல், சொந்த ஜாமீனில் செல்ல வைகோவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT