தமிழ்நாடு

சோரியாங்குப்பம் மதுக்கடைகள் மீது தாக்குதல் சம்பவம்: 9 பேர் கைது

சோரியாங்குப்பம் கிராமத்தில் மதுக்கடைகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

சோரியாங்குப்பம் கிராமத்தில் மதுக்கடைகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் புதிய மதுக்கடைகளை திறக்கவும், ஏற்கெனவே உள்ள கடைகளை மூட வலியுறுத்தியும்  அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்பட்ட போது போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்குள்ள மதுக்கடைகள் மீது கல் வீசி தாக்கியும் ,  மது கடைகளுக்கு தீ வைத்து எரித்ததனர்.

அப்போது போலீசார் போராட்டக்கார்களை தடியடி நடத்தி கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டர்னர். இதனையடுத்து சோரியாங்குப்பம் கிராமத்தை சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த  புகழ், ஜெகன், அமுதன், ராஜ்குமார், முருகன், ஆறுமுகம், செல்வம், அரியபாரதி, சிவானந்தம் உள்ளிட் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாக்சிக் டீசர்!

கே.என். நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!- Vijay | செய்திகள் : சில வரிகளில் | 20.2.26

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி!

ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்கும் நெல்சன்: வெளியானது அறிவிப்பு

#T20WC | ஆஸ்திரேலியா தோற்றதன் காரணம் என்ன?: ஒரு பார்வை | T20 World Cup | Cricket Australia |

SCROLL FOR NEXT