தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., அங்கீகாரமில்லா மனைகள் மூலமாக அடமானக் கடன்

DIN

மத்திய அரசின் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செயலாக்கம், அங்கீகாரமில்லாத மனைகளைக் கொண்டு அடமானக் கடன் பெறுவது ஆகியன குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்குத் தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் சரக்கு-சேவை வரியை ஜூலை மாதத்தில் இருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, அந்த வரியை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் அதற்கான சட்ட மசோதா கொண்டு வரப்படுவது அவசியம். அதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்த பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மனைகளைக் கொண்டு கூட்டுறவு வங்கிகள் போன்ற மாநில அரசின் நிதி அமைப்புகளில் கடன்களைப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT