முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை எவ்வளவு? அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்!

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:36 PM
பகிர்:

மதுரை: தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துத்துறை முதன்மை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு, ஊதிய நிலுவைத் தொகை மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய பணப்பலன்கள் ஆகியவற்றை வழங்கக் கோரி இம்மாதம் 15-ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலார்களின் பிரச்சினைகள் குறித்து உயர் நீதின்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் தற்போதைய ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →