தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கில் கடைசி குற்றவாளி கைது

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

நீலகிரி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் ஓம் பகதூர். இவரைக் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அதிகாலை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.

மேலும், பங்களாவில் உள்ள சில ஆணவங்களும் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி குற்றவாளி தலைமறைவாக இருந்த குட்டி என்ற ஜிதினை போலீசார் இன்று கைது செய்தனர். கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜிதினை கோத்தகிரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT