முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக தொண்டர்களுக்கு திமுக திடீர் அறிவுறுத்தல்

கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக திமுக தலைமைக் கழகம் சார்பில் தொண்டர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக தொண்டர்களுக்கு திமுக திடீர் அறிவுறுத்தல்

கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக திமுக தலைமைக் கழகம் சார்பில் தொண்டர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:


சென்னை: கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக திமுக தலைமைக் கழகம் சார்பில் தொண்டர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி விரைந்து நலன் பெற நேரில் சந்திப்பதை திமுக தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.

கருணாநிதிக்கு இன்னும் சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது. கருணாநிதிக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, கருணாநிதி விரைந்து நலன் பெற நேரில் சந்திப்பதை திமுக தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். கருணாநிதி விரைந்து முழு நலன் பெற தொண்டர்களின் முழு ஒத்துழைப்பு அவசியம்.

கருணாநிதியை நேரில் சந்திப்பதை தவிர்ப்பதே அவருக்கு தரக் கூடிய சிறந்த பிறந்த நாள் பரிசு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 94வது பிறந்த நாள் என்பதால், முன்கூட்டியே திமுக தலைமை தொண்டர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் திமுகவின் சட்டமன்ற வைர விழாவை சிறப்பாகக் கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வரும் ஜூன் 3ம் தேதி அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுளள்து.

முழு கட்டுரையைப் படிக்க →