முகப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லி ஷாகிதி பூங்காவில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் போராட்டத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற விவசாயிகள்.
தமிழ்நாடு

தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஷாகிதி பூங்காவில்

தமிழ்நாடு

தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஷாகிதி பூங்காவில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லி ஷாகிதி பூங்காவில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் போராட்டத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஷாகிதி பூங்காவில் தமிழக விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய கிஸான் சபை ( ஏஐகேஎஸ்) இந்திய விவசாயிகளை ஒருங்கிணைத்து தில்லி ஷாகிதி பூங்காவில் புதன்கிழமை முதல் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் நாள் போராட்டத்தில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் தர்னாவில் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் துரை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரன் பேசியதாவது: 
விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் சுபீட்சமே நாட்டின் முன்னேற்றமாகும். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் துரைமாணிக்கம் பேசுகையில், "விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமையாகும். 
ஆனால், மத்திய அரசு கடமை தவறி வருகிறது. பயிர் காப்பீட்டில், தேசிய காப்புறுதித் திட்டத்தை பயன்படுத்தாமல், தனியார் காப்புறுதி நிறுவனங்களைப் பயன்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயிர்க் காப்பீட்டில் தேசிய காப்புறுதித் திட்டத்தையே பயன்படுத்த வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை விரைந்து அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை மத்திய அரசுப் பட்டியலில் சேர்க்காமல் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகல் 300 பேர் பங்கேற்றுள்ளனர்' என்றார் துரைமாணிக்கம்.

முழு கட்டுரையைப் படிக்க →