முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு அநீதி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

முதுநிலை நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறைந்த அளவில் அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கு அநீதி இழைத்துள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

முதுநிலை நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறைந்த அளவில் அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கு அநீதி இழைத்துள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்விக்கான கட்டமைப்புகளைப் பிற மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கும் நோக்குடன் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழத்துக்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜன. 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 31-ஆம் தேதி முதல் நவ.27-ஆம் தேதி வரை பெறப்படுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை அமைப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் தமிழகத்துக்குப் போதுமானவை இல்லை.
நீட் தேர்வுக்கு அக். 31 மாலை 3 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள 6 தேர்வு மையங்களும் நிரம்பி விட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 1.20 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் சுமார் 10,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு அவர்களை விட அதிகம் பேர் நீட் தேர்வில் பங்கேற்கக்கூடும். எனவே, தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களை தேசிய தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு கடுமையாக நெருக்கடி தர வேண்டும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →