புதுச்சேரி தலைமைச் செயலர் திடீர் மாற்றம்
புதுச்சேரி தலைமைச் செயலர் பதவியில் இருந்து மனோஜ் பாரிதா திடீரென வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:32 PM
புதுச்சேரி தலைமைச் செயலராக மனோஜ் பாரிதா செயல்பட்டு வந்தார். புதுச்சேரி அரசு அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாடில் இருந்து வரும் நிலையில், தலைமைச் செயலர் மனோஜ் பாரிதா அமைச்சர்களுக்கு ஆதராவக செயல்படுவதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பினார்.
இந்நிலையில், புதுச்சேரி தலைமைச் செயலர் பதவியில் இருந்து மனோஜ் பாரிதா வெள்ளிக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலராக அஷ்வின் குமார் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement