தமிழ்நாடு

மலைப் பகுதிகளில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

DIN

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததையடுத்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து இருந்தது.
கோதையாற்றில் அதிக வெள்ளம் வந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, திற்பரப்பு பேரூராட்சி சார்பில் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT