முகப்பு
தமிழ்நாடு

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை இன்று அதிகாலை சோதனையை தொடங்கியது. அதைத்தொடர்ந்து, ஜெயா டிவிக்கு தொடர்புடைய அலுவலங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தினகரன் வீடு, சசிகலா சகோதரர் திவாகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோல் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →