தமிழ்நாடு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலமாகத் திருப்பூர், க ரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாகப் பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். 
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்மேற்குப் பருவ மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 85 அடி வரை உயர்ந்தது. அதன் பின்னர் கரூர் வரையிலான கரையோர கிராமங்களின் குடிநீர்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50 அடியாகச் சரிந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. 
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணை நிலவரம்: 90 அடி உயரம் கொண்ட அணையில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 65.29 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,011 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 256 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT