தமிழ்நாடு

ஏன் தற்பொழுது மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?  

DIN

சென்னை: பெரும்பாலான மழை கடலிலேயே பெய்து விட்டதால் தற்பொழுது மழை குறைவாக இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிந்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, ஏறக்குறைய 2000 சதுர கிலோ மீட்டர் அளவில் பரவியிருந்த மேகக்கூட்டமானது கடல்பகுதியியிருந்து நிலப்பகுதியினை நோக்கி நகர்ந்தது. அப்பபோழுது அதிக அளவில் காற்று வீசியதன் காரணமாகவும், திசை மாறியதாலும் பெருமபாலான மழை கடலிலேயே பெய்து விட்டது. இதன் காரணமாகத்தான் நமக்கு தற்பொழுது எதிர்பார்த்த அளவு மழை இல்லை.       

அடுத்த 24 மணி நேரத்தினைப் பொறுத்த வரை தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.

சென்னையினைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டமாக இருக்கும். ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. அவ்வளவு அதிக மழையிருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT