தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி தேர்தல் ஆணையம் பதில் மனு

தினமணி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாத மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், செப்.18-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்.
 நவ. 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்திருந்தனர்.
 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெஃரோஸ் கான், தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கடந்த நவ. 6, 7 மற்றும் 10-ஆம் தேதிகளில் ஆஜராகினர். ஆனால் வழக்குப் பட்டியலிடப்படாததால், விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் இருவரும் இந்த வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (நவ.14) நேரில் ஆஜராக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
 தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்றம் நிர்ணயித்த காலத்துக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என எந்த உள்நோக்கமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அட்டவணையின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT