தமிழ்நாடு

தொடர் மழை: சிரமத்தைச் சந்தித்த சென்னை நகரவாசிகள்

DIN

சென்னை மாநகரில் திங்கள்கிழமை விட்டு விட்டுப் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சென்னை நகரவாசிகளை சிரமத்தை ஏற்படுத்தியது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் திங்கள்கிழமை பகலில் மேகமூட்டத்துடன் லேசான தூறலாகவும் அவ்வப்போது கனமழையாகவும் பெய்து வந்த நிலையில் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இம்மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை மிதமான அளவில் இருந்தது.
மாணவர்கள் பாதிப்பு: சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை மழையின் தாக்கம் குறைந்திருந்ததால் பள்ளிகள் செயல்பட்டன. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ, மாணவியர், வேலைக்குச் சென்றவர்கள் சற்று சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இரவிலும், அதிகாலையிலும் பரவலாக கன மழை பெய்தது. 
நீர்வரத்து அதிகரிப்பு: தொடர் மழை காரணமாக, புழல் ஏரிக்கு நீர் வரத்து 243 கனஅடியிலிருந்து 801 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், சோழவரம் ஏரிக்கு 162 கனஅடியும், பூண்டி ஏரிக்கு 196 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 256 கனஅடியும் நீர்வரத்து உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் இந்த ஏரிகளின் நீர் மட்டம் 40 சதவீதத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, மழை பெய்தால் ஏரிகளின் நீர் மட்டம் பெருமளவில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தொடர்ந்து பெய்த மழையால் சென்னை அண்ணாநகர் பகுதியில் திங்கள்கிழமை மாலை பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. போலீஸார், மீட்பு பணிக் குழுவினர் அப்பகுதிக்குச் சென்று மரக்கிளைகளை வெட்டி போக்குவரத்தை சீர்செய்தனர். மழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்தனர்.
கூடுதல் பஸ்கள் தேவை: மழைக்காலத்தில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை அடுத்து பணிக்குச் செல்வோர் பெருமளவில் இருசக்கர வாகனங்களைத் தவிர்த்து பேருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், பேருந்துகளில் கூட்டநெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதையடுத்து, காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT