பணி நியமன ஆணைகள் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்
அரசு பணி நியமன ஆணைகள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அரசு பணி நியமன ஆணைகள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 89 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக புதிதாகப் பணியாளர்கள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். 7 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
முந்தைய காலங்களில் சம்பந்தப்பட்ட இலாகாக்கள் மூலம் பதிவுத் தபாலில் பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும்.
விழா மூலம் நேரடியாகப் பணி நியமன ஆணைகள் வழங்குவதால், பணி நியமன ரகசியங்கள் முன்கூட்டியே தெரிய வாய்ப்புள்ளது. இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, பணி நியமன ஆணைகளை நேரில் வழங்குவதைத் தவிர்த்து, பதிவு தபால் மூலம் தேர்வு செய்யப்பட்டவருக்கு அனுப்ப வேண்டும்.