தமிழ்நாடு

ரொட்டித் துண்டு, கொஞ்சம் தண்ணீருடன் 80 வயது தாயை தவிக்கவிட்டுச் சென்ற மகன்

முதியவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 

ENS


காரைக்குடி: முதியவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 

காரைக்குடியில், பிரபு நகரில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர், படுத்த படுக்கையாக இருக்கும் தனது 80 வயது தாயை, சில ரொட்டுத் துண்டுகளையும், பாட்டிலில் தண்ணீரையும் வைத்துவிட்டு 8 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார்.

வீட்டையும் பூட்டி, வீட்டு வாயிலில் இருக்கும் கேட்டையும் பத்திரமாக பூட்டிச் சென்ற ராஜேந்திரன், தனது தாயை மட்டும் போர்ட்டிகோவில் ஒரு கட்டிலில் கிடத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறை உதவியுடன் அந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவரது உடல்நிலை இருப்பதால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கட்டிலில் எந்த அசைவும் இன்றி மூதாட்டி படுத்திருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து விட்டதாக முதலில் கருதியுள்ளனர். பிறகு தான் அவர் உயிரோடு இருப்பதே தெரிய வந்தது.

முன்பெல்லாம் ராஜேந்திரன் வெளியூர் செல்லும் போது, தாய்க்கு உணவளிக்குமாறு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை யாரிடமும் சொல்லாமல் போர்டிகோவில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து விசாரித்து வரும் காவல்துறையால், ராஜேந்திரனை இதுவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT