தமிழ்நாடு

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு நூதனப் போராட்டம்

தினமணி

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்காத அரசை கண்டித்து, இன்று ஊழியர்கள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 7 ஆண்டுகளாக 1311 பேர் தினக்கூலி (வவுச்சர்) ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்காத அரசை கண்டித்தும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலி ரூபாய் 398 யை நடைமுறைபடுத்த கோரியும், 10 மாதமாக ஊதியம் வழங்காததால் வறுமையில் உயிரிழந்த 9 ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தி வவுச்சர் ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊதியம் இல்லாமல் வறுமையில் வாடும் தங்களின் நிலையை அரசுக்கு உணர்த்தும் வகையில்  பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் வீடுகளை தங்கள் குடும்பத்தினருடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT