தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,954 கன அடியாகச் சரிவு

DIN

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,954 கன அடியாகச் சரிந்தது. காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நொடிக்கு 48 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில தினங்களாக காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,954 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 95.09 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 58.66 டி.எம்.சி.
மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், அனல் மின் நிலையத்தில் 30 மெகாவாட்டும், சுரங்க மின் நிலையத்தில் 115 மெகாவாட்டும், கதவணை மின் நிலையங்களில் 105 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT