ஜிஎஸ்டி தாக்கல் தாமதம்: தினமும் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்
சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை வணிகர்கள் தாக்கல் செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடுஜிஎஸ்டி தாக்கல் தாமதம்: தினமும் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்
சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை வணிகர்கள் தாக்கல் செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை வணிகர்கள் தாக்கல் செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வணிகவரித்துறை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை கொடுத்த மனு விவரம்: வணிகர்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தாமதத்துக்கு நெட்வொர்க், சர்வர் போர்ட்டல் மற்றும் கணினியில் ஏற்பட்டிருந்த குழப்பங்களே காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு வணிகர்கள் மீது தினமும் ரூ.200 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் ஜிஎஸ்டி கணக்குத் தாக்கலை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தையும் நிகழாண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட வேண்டும்.