முகப்பு
தமிழ்நாடு

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை: பா. ரஞ்சித்

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல்.  இந்தப் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் பா. ரஞ்சித், 
மெர்சல் படத்தில் வரும் காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. எனவே ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க தேவையில்லை. ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் 2018 ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு உள்ளது. 2.0 திரைப்படம் வெளியான பின் காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →