வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய யானை
கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வீரபாண்டிப்புதூர், வீரபாண்டி, தடாகம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களில் நுழைந்த யானை, பயிர்களைச் சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வீரபாண்டிப்புதூர், வீரபாண்டி, தடாகம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களில் நுழைந்த யானை, பயிர்களைச் சேதப்படுத்தியது.
ஆனைகட்டி வனப் பகுதியில் இருந்து வந்த அந்த யானை வீரபாண்டிப்புதூர், வீரபாண்டி, தடாகம் பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தியது. பின்னர் சின்னத்தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த தண்ணீர்த் தொட்டிகளையும், குழாய்களையும் உடைத்துச் சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த கோவை வனத் துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்ட முயன்றனர். ஆனால், வெள்ளிக்கிழமை காலை 8 மணிவரை அவர்களுக்கு போக்கு காட்டிய யானை பின்னர் தடாகம் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.