சுகாதாரத்தில் அலட்சியம்: சுங்கச்சாவடிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில், சுகாதாரத்தில் அலட்சியமாக இருந்ததாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
தமிழ்நாடுசுகாதாரத்தில் அலட்சியம்: சுங்கச்சாவடிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில், சுகாதாரத்தில் அலட்சியமாக இருந்ததாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில், சுகாதாரத்தில் அலட்சியமாக இருந்ததாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்துத் துறையினரையும் முடுக்கி விட்டு சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதேவேளையில், சுகாதாரத்தை உரிய முறையில் பராமரிக்காத, கொசு உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும் வீடுகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் வினோத், பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) ஆனந்தன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அலுவலகத்துக்குப் பின்புறம் திறந்த வெளியில் பழைய டயர்கள், பேரல்கள், இயந்திர தளவாடப்பொருள்கள் போன்றவை தண்ணீர் தேங்கி இருந்தது. அதில், டெங்கு உள்ளிட்ட வைரஸ் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் லார்வாக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தண்ணீர் தேங்கியிருந்த டயர்கள் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் குழுவினர் அப்புறப்படுத்தி,
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சௌண்டம்மாள், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சுங்கச்சாவடி பகுதியில் சுகாதாரத்தை பராமரிக்காமல் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் அலட்சியமாக இருந்த அந்த நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், அதிகாரிகள் குழுவினர், சுங்கச்சாவடி மேலாளர் முத்துஅண்ணாமலையிடம், சுகாதாரத் துறையின் எச்சரிக்கை நோட்டீஸ், ரூ.1 லட்சம் அபராதத்துக்கான ரசீதை வழங்கினர். எச்சரிக்கை நோட்டீûஸ மட்டும் பெற்றுக்கொண்ட சுங்கச்சாவடி மேலாளர், அபராதத்துக்கான ரசீதை பெறாமல், இது தொடர்பாக, ஆட்சியரிடம் பேசி அவகாசம் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.
2 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்: திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை காலை டெங்கு தடுப்பு சுகாதாரப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், பெருமாள் கோயில் வீதியில் புதிதாக கட்டப்படும் தனியார் வணிக வளாக கட்டடப் பகுதியில் சுகாதாரமின்றி கொசுப்புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியிருந்ததை பார்வையிட்டார். இதேபோல, நேஷ்னல் பள்ளி எதிரே உள்ள தனியார் வணிக வளாகத்திலும் கொசுப்புழு உற்பத்தியாகியிருந்ததை கண்டறிந்தார்.
இதனையடுத்து, கொசு ஒழிப்பில் அலட்சியமாக செயல்பட்டதாக, அந்த இரு வணிக நிறுவன உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ், இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.