கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சனிக்கிழமை கைது செய்தது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்துக்காக இலங்கை கடற்படையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழக கடலோர மாவட்டமான ராமசுவரத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன்படித்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இதே ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த காரணத்துக்காக இலங்கை கடற்படையால் டெல்ஃப்ட் தீவு அருகில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.