திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்போம்: திவாகரன்
நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
தமிழ்நாடுதிமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்போம்: திவாகரன்
நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டில் விலக்கு கிடைத்து விடும் என்று மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
எங்கள் அணிக்கு 60 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 8 அமைச்சர்கள் இரண்டு அணியும் ஒன்று சேருவதற்காக பேச்சு நடத்தி வருகின்றனர். 32 மாவட்டங்களுமே எங்கள் அணியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என்பதல்ல. 5 முறைக்கும் மேலாக உறுப்பினராக இருந்து வரும் பேரவைத்தலைவர் தனபால் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும். இதன் மூலம், தாழ்த்தப்பட்டவர் முதல்வராகும் கனவு நிறைவேறும் என்றார் அவர்.