தமிழ்நாடு

நீட்டி முழக்க வேண்டாம்: நீட் விவகாரம் குறித்து கமல் கண்டன ட்வீட்! 

நீட் விவகாரம் பற்றி தயவாய் நீட்டி முழக்க வேண்டாம்; இது விடை காணும் வேளை என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: நீட் விவகாரம் பற்றி தயவாய் நீட்டி முழக்க வேண்டாம்; இது விடை காணும் வேளை என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

'நீட்' தேர்வின் காரணமாக மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு கிடைக்காமல் அரியலூர் மாணவி அனிதா தன் உயிரை நீத்தார். இதன் காரணமாக வெகுண்டு தமிழகம் எழுந்துள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் நீட் விவகாரம் குறித்து நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில்  ''நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடி யோசிப்போம்.வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT