மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி. 
தமிழ்நாடு

மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்கிடம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நேரில் மனு

மாணவி அனிதாவின் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர்

DIN

மாணவி அனிதாவின் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் கே. கிருஷ்ணசாமி நேரில் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புது தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை மாலை கே.கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து மனு அளித்தார். 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
செப்டம்பர் 1-ஆம் தேதி மாணவி அனிதா திடீரென மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு விதமான சந்தேக அம்சங்கள் உள்ளன. இதுகுறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளித்தேன். அனிதாவின் மரணத்தை வைத்து தேசியத்திற்கு எதிராக அரசியல் செய்யும் போக்கு உருவாகி வருகிது. இதனால், அனிதாவின் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன்.
மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதேவேளையில், 'நீட்' தேர்வை மே மாதம் எழுதி அதில் 86.50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 
அந்த இளம் பள்ளி மாணவியை திசைதிருப்பும் வகையில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, அவரை அரசியல் லாபங்களுக்காக மாநில அரசுக்கு எதிராகவும், இந்திய தேசத்திற்கு எதிராகவும் செயல்படுவதற்கு ஒரு கும்பல் திட்டமிட்டது. ஜனவரி மாதத்திலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது இதேபோன்று தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக ஒரு கும்பல் செயல்பட்டது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதாவின் மரணத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய உள்துறை அமைச்சரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்துள்ளோம்.
குறைந்தபட்சம் நீட் தேர்வை அடிப்படையாக வைத்தாவது தமிழகத்தில் கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் 'நீட்' தேர்வை ஆதரிக்கிறேன் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT