முகப்பு
தமிழ்நாடு

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

திட்டமிட்டப்படி செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

சென்னை: திட்டமிட்டப்படி செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சட்டப்பேரவையில் எங்களின் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம். திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ல் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றார்.

மேலும், தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். என் கேள்விக்கு பதிலளிக்க துணிவில்லாதவர்கள் என்னை கீழ்தரமாக விமர்சிக்கிறார்கள் என்று கூறினார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்ககையன் போல் மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →