தமிழ்நாடு

எச்.ராஜாவை தமிழக சாரண இயக்கத்தின் தலைவராக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

DIN

தமிழக சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை தேர்ந்தெடுக்க தமிழக அரசு முயற்சிப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவியை தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி செய்து வருகின்றனர்.
நீண்ட நாள்களாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்த சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள இந்தப் பதவிக்கு செப்டம்பர் 16-இல் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் இந்தப் பதவிக்கு எச்.ராஜா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக சில தினங்களுக்கு முன்பு முதல்வரையும் சந்தித்துள்ளார்.
எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி, பள்ளிக் கல்வியில் பழுத்த அனுபவம் பெற்ற மணி போட்டியிட விரும்புகிறார்; போட்டியிட்டே தீருவேன் என்று அவர் துணிச்சலாக களத்தில் நிற்பதால் வேறு வழியில்லாமல், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் எச்.ராஜாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறப்படுவதாக தெரிகிறது.
அதிமுக அரசாங்கத்தில் பதவியைப் பெற பாஜக பகிரங்கமாக முயற்சி செய்து கொண்டிருப்பது இந்த சாரண, சாரணியர் தேர்தலில் மூலம் உறுதியாகிவிட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம் அகில இந்திய அளவில் இந்துத்துவ கொள்கையையும், மதவாதக் கொள்கைகளையும் மாணவர்கள் இதயத்தில் புகுத்திவிட முயற்சிக்கும் மத்திய பாஜக அரசு, தற்போது தமிழகத்தில் உள்ள சாரண, சாரணியர் இயக்கத்துக்குள்ளும் புகுந்து தமிழக மாணவர்கள் மனதில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது.
எனவே, அதிமுக - பா.ஜ.க. கூட்டணியை மாநிலத்தின் கல்வி அமைப்பிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் சாரண, சாரணியர் இயக்கத்திலும் நுழைய கல்வியாளர்கள் அனுமதித்து விட வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT