தமிழ்நாடு

தமிழக காவல்துறை டிஜிபி, ஆணையருடன் முதல்வர் பழனிசாமி 'திடீர்' ஆலோசனை! 

DIN

சென்னை: அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை ஆணையருடன் 'திடீர்' ஆலோசனை நடத்துகிறார்.

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து தமிழகம்  முழுவதும் பரவலாக 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரிக்கு அருகே பள்ளி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல தங்களது பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு தொடர் போராட்டங்கள் மற்றும் மறியல் நடத்தி வருகிறது.  

இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

இந்நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் மற்றும் காவல்துறை ஆணையர் விஸ்வநாதனுடன்  'திடீர்' ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT