சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 
தமிழ்நாடு

ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்பதா?: டிடிவி தினகரனுக்குக் கண்டனம்

ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனக் கூறிய டிடிவி தினகரனுக்கு பொதுக் குழுவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

DIN

ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனக் கூறிய டிடிவி தினகரனுக்கு பொதுக் குழுவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.பி.முனுசாமி ஆகியோர் பேசினர்.
பா.வளர்மதி பேசுகையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றி வந்தார். ஆனால், அவரது ஆட்சியைத் தூக்கி விடுவோம், கலைத்து விடுவோம் என சிலர் மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்கள் எதுவும் எடுபடாது. இந்த ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்றார்.
இதே கருத்துகளை கே.பி.முனுசாமி பேசினார். இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தனக்குப் பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகளுக்கு மேலும் இருக்கும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்னார். நமது ஒற்றுமையின் மீதுள்ள நம்பிக்கையில்தான் அவர் கூறினார். அவர் கொடுத்த வாக்குறுதியையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT