முகப்பு
தமிழ்நாடு

சிபிஎம் நிகழ்ச்சி: கமல் விளக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் விளக்கம் அளித்துள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல். இந்நிலையில் கமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

சங்கடமாக உள்ளது. கேரள முதலமைச்சருடன் கோழிக்கோடு கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அக்டோபர் வரை ஒவ்வொரு சனியன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பேன். சிபிஎம் மாநாட்டுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →