தமிழ்நாடு

நீட்: 19 -இல் திருச்சியில் பொதுக் கூட்டம்: டிடிவி தினகரன்

DIN

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, திருச்சியில் வரும் 19 -ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, பெருவாரியாக மாநில பாடத் திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களை அந்தத் தேர்வில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் வரும் 16 -ஆம் தேதி அதிமுக அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் தடைகளைத் தகர்த்தெறிந்து, நீதிமன்ற அனுமதிப்படி, வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT