தமிழ்நாடு

பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி! 

மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். இவருக்கு மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிய பதவியை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக  டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை நியமிக்கப்படுகிறார்.

இந்த புதிய பொறுப்பு அறிவிப்பானை வெளியிடும் நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழிசை அந்தப் பதவியில் நீடிப்பார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இன்றைய தேதியிட்டு புதிய பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தமிழிசை இன்று முதல் அந்தப் பொறுப்பிற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 எம்எல்ஏ.க்கள் - 500 திமுகவினா் கைது

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம்: டிச.15-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

ரூ.6.15 லட்சம் வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மக்களவையில் தகவல்

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

SCROLL FOR NEXT