முகப்பு
தமிழ்நாடு

தியாகத்திற்காகவே எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைப்பு: எம்எல்ஏ வெற்றிவேல்

தியாகத்திற்காகவே எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

தியாகத்திற்காகவே எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
சசிகலா, தினகரன் குறித்து தொடர்ந்து அவதூறு பேசினால் வழக்கு தொடருவோம். எம்எல்ஏக்கள் இல்லாததால் மக்கள் பிரச்னைகள் பாதிக்கப்பட்டால் அவர்களது காலில் விழவும் தயார்.  இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த மாதம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் எம்எல்ஏக்கள் 19 பேரும் திடீரென கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →