தமிழ்நாடு

அதிமுக அணிகள் இணைப்புக்கு பிந்தைய சூழல்: தில்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை 

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அதிமுக அணிகள் இணைப்புக்கு பிந்தைய சூழல் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த தில்லி வந்துள்ளதாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்

DIN

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அதிமுக அணிகள் இணைப்புக்கு பிந்தைய சூழல் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த தில்லி வந்துள்ளதாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் கூறினார். 
மாநிலங்களவை அதிமுகஉறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தனர். 
இந்நிலையில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் புது தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவை நண்பகலில் சந்தித்தார். பின்னர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் 18 பேரை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் திங்கள்கிழமை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் 'தினமணி' நிருபரிடம் கூறியதாவது: 
குடியரசுத் துணைத் தலைவரையும், நிதியமைச்சர் ஜேட்லியையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சூழல்கள் குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த நான், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தில்லி வந்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஒய்யாரம்... ஷிவானி!

தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

SCROLL FOR NEXT