தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்கள் பணியின்போது அடையாள அட்டை அணிய உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின்போது அடையாள அட்டையை அணிய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின்போது அடையாள அட்டையை அணிய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைச்  செயலர் ஸ்வர்ணா ஐஏஎஸ் பிறப்பித்திருக்கும் உத்தரவில், அரசு ஊழியர்கள், அலுவலகத்தில் பணியின்போது தங்களுக்கான அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டியது அவசியம்.

பணியாளர்/ஊழியர் பெயர், அவர் வகிக்கும் பதவி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற வேண்டும். இதற்கேற்றார் போல அடையாள அட்டையில் மாற்றம் செய்து வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT